மகிழ்ச்சி

வகுப்பு - 8


தமிழன்னையைச் சிரம் தாழ்த்தி வணங்குகிறோம். அன்புள்ளம் கொண்ட பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எங்களின் பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இன்றைய காலக்கட்டத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் தேவைகளை உணர்ந்து அவர்களின் பன்முக ஆற்றல்களான பேசுதல், வரைதல், வண்ணமிடுதல், பாடுதல், எழுதுதல், படித்தல், கற்பனைத் திறன் போன்றவற்றை வளர்ப்பதில் மரியாவின் மகிழ்ச்சி என்னும் இப்பாடநூல் பெரிய அளவில் உறுதுணை புரியும் என்று நம்புகிறோம். இந்நூலில் இடம்பெற்றுள்ள பாடல்கள், உரைநடைகள், கதைகள், சிறுசிறு பயிற்சிகளின் மூலமாக மாணவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான ஒழுங்கு முறைகளும், நீதிகளும் உணர்த்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு வகுப்பிற்கேற்ற வகையில் இலக்கணமும், இலக்கணப் பயிற்சிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

இன்றைய நவீன சூழலில் கல்வி பயிலும் மாணவச் செல்வங்களுக்கு உதவும் வகையில் மின்நூல், அசைவூட்ட காணொளி, செயல்பாடுகள், குறளொலி, வினாத்தாள்கள், விடை தொகுப்பு போன்ற இணைய வழியிலான துணைக்கருவிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இவை மாணவர்களிடையே தமிழ் பற்றை வளர்ப்பதில் சிறந்த பங்களிப்பை தரும் என நம்புகிறோம்.